இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க "பல்லாஜியோ கொழும்பு" முதன்மையான விளையாட்டு அரங்கம்


ஸ்ரீலங்கா ஓர் வேகமாக வளர்ந்துவரும் நாடு. இது இந்தியர்களால் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளாலும் மிகவும் விரும்பப்படும் ஓர் பயண இலக்கு நாடு ஆகும்.

ஸ்ரீலங்கன் விமானச் சேவை மற்றும் தி கிங்ஸ்பரி ஹோட்டல் ஆகியவற்றுடன் இணைந்து தற்போது ‘பல்லாஜியோ கேசினோ கொழும்பு’ எனும் இரவு கொண்டாட்ட நிகழ்ச்சி ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று கோவையிலுள்ள தி லி மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆடல், பாடல் நிகழ்ச்சியை தென்னகத் திரை நட்சத்திரம் “செல்வி ரகசியா”, தனது மும்பை நடனக் குழுவினருடன் இணைந்து நடத்தினார். 



‘பல்லாஜியோ கொழும்பு’ கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தரப்படும் வசதிகள், சேவைகள் புதிய விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் மீண்டும் மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு வரத்தூண்டும் வகையில் மிகவும் மகிழ்ச்சியடையச் செய்து வருகிறது. நாட்டிலேயே மிகவும் பெரிதுமான, வசதியானதுமான விளையாட்டு சேவையை வழங்கும் ‘பல்லாஜியோ கொழும்பு’, பல்வேறு விளையாட்டுக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.



இங்கு, தினசரி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கலாச்சார நடனங்கள், கேளிக்கை இரவுகள் என ஆண்டுமுழுவதும் இங்கு வரும் விருந்தினர்களை உற்சாகப்படுத்துவதற்கான நிகழ்வுகள் தொடர்கின்றன.

இங்கு விளையாட்டுக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் எவ்விதமான கட்டுப்பாடும் அளவுகோலும் வரையறுக்கப்படுவதில்லை. 

அதிகாரப்பூர்வமான விமான நிறுவனம்:- 

உலக அளவிலான விமான சேவையில் தனது சிறப்பான சேவையை வழங்கிவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கடந்த ஜூலை மாதம் முதல் தென்னிந்திய நகரங்களான ஹைதராபாத், கோவை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு தனது விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளது.



இதற்குமுன்னர், சென்னையில் இருந்து 35 விமானங்கள் கொழும்புவிற்கு ஒவ்வொரு வாரமும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விரிவுபடுத்தப்பட்ட விமான சேவையின் மூலமாக இந்தியர்களுக்கும் இலங்கைவாசிகளுக்கும் இடையேயுள்ள மகிழ்ச்சியான உறவுப்பாலம் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...